இனி டவுன்லோடு செய்யலாம் “பிரச்சனை சரி செய்யப்பட்டது” ஃபேஸ்புக் நிறுவனம்..!!

ஃபேஸ்புக் நிறுவனம் புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை டவுன்லோடு செய்ய முடியாத நிலையில் தற்போது அதனை சரி செய்து விட்டதாக தெரிவித்துள்ளது  

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள செயலிகள்  உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவையனைத்தும் பயனாளர்களிடமிருந்து பிரிக்க முடியாத ஓன்று என்றே சொல்லலாம். இந்நிலையில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் நேற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Image result for Facebook, instagram, whatsapp

இதனால் பயனர்கள் பரிதவித்து வந்துள்ளனர். இந்த 3 செயலிகளிடமிருந்து புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை டவுன்லோடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து முக்கியமான 3 சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனர்கள் அனைவரும் ட்விட்டர் பக்கம் சென்றனர். இதன் காரணமாக  #facebookdown, #whatsappdown, #instagramdown ஹேஸ்டேக்குகளை பயன்படுத்தி பயனர்கள் பதிவிட்டு வந்தனர்.

Image result for Facebook Company .. !!

இந்த நிலையில் தற்போது இந்த நிலை சரிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம், நேற்று முழுவதும் எங்கள் நிறுவனத்தின் பராமரிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் பயனாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோக்களை டவுன்லோடு செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. தற்போது இதனை நாங்கள் முழுவதுமாக சரி செய்து விட்டோம்” எனத் தெரிவித்துள்ளது.