ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங்குடன் இணையும் பிரியங்கா..!!

இந்தியில் முன்னணி கதாநாயகியான பிரியங்கா சோப்ரா தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். 

பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் அமெரிக்க  பாடகரும், நடிகருமான நிக் ஜோனசை கல்யாணம் செய்துகொண்டார். நடிகை பிரியங்கா தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு 3 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மற்றோரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதை பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து இவர் கூறுகையில் “பிரபல ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங்குடன் இணைந்து புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளேன். நல்ல கதைகளை சொல்வதில் விருப்பம் கொண்ட இரண்டு பெண்கள் இந்த படத்தில் இணைவது பெருமையாக உள்ளது. விரைவில் சினிமாவில் சந்திக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார். இப்படத்தை மிண்டி காலிங் இயக்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.