”தலைவராக பிரியங்கா சரியான நபர்”   பீட்டர் அல்போன்ஸ் கருத்து….!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க பிரியங்கா காந்தி சரியான நபர் என்று தமிழக காங்கிரஸ்  பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பலரை பொறுப்பாக வேண்டுமென்று தெரிவித்தார்.

மேலும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் பதவி விலகினர்.ஆனால் ராகுல் காந்தி தலைவர் பதவியில் நீடிக்க வேண்டு மென்று பலரும் வலியுறுத்தினர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில் , பிரியங்கா காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க சரியான நபர். கட்சி  தொண்டர்களுடன் பழகும் தன்மை , மக்களை வசீகரிக்கும் ஆற்றல் , எதிர்க்கட்சியினரை அனைத்து வகையிலும் எதிர்கொள்ளும் துணிவு போன்ற பல காரணிகளை அடுக்கிக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.