“ராஜினாமா செய்யும் துணிச்சல் சிலருக்கு மட்டுமே” பிரியங்கா காந்தி ட்வீட் ..!!

தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் துணிச்சல் சிலருக்கு மட்டுமே இருக்கும் என்று பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில  நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர்  பொறுப்பை ராஜினாமா செய்வதற்கான விரிவான அறிக்கை வெளியிட்டார். ராகுலின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை காங்கிரஸ் கட்சி தலைமை தெரிவித்தது.

Image result for rahul priyanka gandhi

இந்நிலையில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ள ட்வீட்_டுக்கு பதில்  அளித்திருந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் , ராகுலின் சகோதரியுமான  பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளதில், தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் துணிச்சல் சிலருக்கு மட்டுமே இருக்கும் அதை நீங்கள் செய்து விட்டீர்கள் ராகுல் உங்களின் முடிவுக்கு நான் மதிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.