பிரியங்கா காந்தி – கேரளாவில் இரண்டு நாட்களுக்கு தேர்தல் பிரசாரம்…..!!

கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப் போகிறார்.

இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் வருகின்ற 6-ந் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றார்.

அதன்பின் பிரியங்கா காந்தி இன்றும், நாளையும் பிரசாரம் செய்து,  டெல்லியில் இருந்து இன்று  திருவனந்தபுரம் வந்தடைகிறார். இன்று பிற்பகல் திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதிகளில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை வலிய துறை பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார்.

இன்று வலிய திரையில் பிரசாரம் முடிந்த பின்பு, இரவு திருவனந்தபுரத்தில் தங்கி விட்டு நாளை காலை அவர் கொச்சி பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார். இறுதியாக கொச்சியிலிருந்து வந்து சாலக்குடி, இருஞ்சாலக்குடா பகுதிகளில் பிரசாரம் செய்து திருச்சூர் சென்றடைகிறார். கூட்டம் முடிந்த பின்பு பிரியங்கா காந்தி டெல்லி புறப்பட்டு செல்வார்.