”திட்டியதோடு , தூக்கி எறிந்தார்கள்” பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்….!!

சினிமாவில் என்னை திட்டியதோடு தூக்கி எறிந்தார்கள் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வந்த புதிதில் இயக்குனர்கள் தன் மீது கோபப்பட்டு திட்டியதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவுக்கு முதன்முதலாக தமிழ் படத்தில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இந்த நிலையில் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பிரியங்கா சோப்ரா வெளிப்படையாக பேசியுள்ளார்.அதில் நான் சினிமாவில் நடிக்க வந்தபோது வந்த புதிதில் மிகவும் கஷ்டப்பட்டேன் , பட வாய்ப்புக்காக அலைக்கழிக்கப்பட்டேன்,

 அப்போது சினிமாவில் எனக்கு யாரையும் தெரியாது , சினிமா பற்றிய புரிதலும் இல்லை , இயக்குனர்கள் என்மீது கோபப்படுவார்கள் , சில என்னை திட்டவும் செய்தார்கள். சினிமாவில் இருந்து தூக்கி எறிந்தனர். அந்த துயரமான நாட்களில் எனது தந்தை ஆதரவாக இருந்தார். தோல்விகளை நாம் எப்போது , எப்படி கையாள்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது என என்னை  நானே ஊக்கப்படுத்தி முன்னேறினேன் என்று பிரியங்கா சோப்ரா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *