சர்ச்சைக்குரிய இடத்திற்கு செல்லாததால்,, சர்ச்சையில் சிக்கிய ப்ரியங்கா காந்தி !!…

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் என்று சொல்லக்கூடிய பாபர்மசூதி இடிக்கப்பட்ட இடத்திற்கு பிரியங்கா காந்தி செல்லாததால் தற்பொழுது சர்ச்சையில் சிக்கியுள்ளார் ..

இந்தியாவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான கொண்டாட்டங்கள் என்பது பரபரப்பாக நடைபெற்று வருகிறது இதனையடுத்து மக்களவைத் தேர்தல் ஆனது  இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது மேலும் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் இருக்கக்கூடிய கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாடெங்கும் பிரச்சார பயணம் என்பது  களைகட்டி வருகிறது இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் உத்தரபிரதேசத்தில் கங்கை நதியோரம் மக்களை சந்திக்கும் விதமாக கங்கை நதி பிரச்சாரத்தை மேற்கொண்டார் இது இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டு வந்தது

இதனையடுத்து தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அவர் பிரச்சாரத்திற்கு சென்று மக்களுடன் மக்களாக சகஜமாகப் பழகி அரசின் நலத்திட்டங்கள் குறித்து விசாரித்து தேர்தல் வாக்குகளை சேகரித்து வந்தார் இதனை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அனுமான் கோவிலுக்கு சென்று வழிபட்டார் ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் சர்ச்சைக்குரிய இடம் என்று சொல்லக்கூடிய பாபர் மசூதி இடிக்கப்பட்ட ராமர் கோயில்  இருக்கும் இடத்திற்கு அவர் செல்லவில்லை என்பது சர்ச்சையாக பரவி வந்தது

இது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப் பட்ட நிலையில் அதற்கு பிரியங்கா காந்தி அவர்கள் பதில் அளித்துள்ளார் அவர் கூறியதாவது சர்ச்சைக்குரிய இடமாக கருதப்படும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட மற்றும்  ராமர் கோயில் இருக்கும் இடமானது ஆனது தற்போது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது ஆகவே அந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதால் தான் அங்கு செல்வது ஏற்புடையதாக இருக்காது என்றும் அதனால் தான் அங்கு செல்லவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். 

மேலும் பாரத பிரதமர்  நரேந்திர  மோடி அவர்கள் தனது தொகுதியான வாரணாசி தொகுதிக்கு தேர்தலுக்கு பின் வரவில்லை என்றும் வாரணாசி தொகுதியில் உள்ள எந்த கிராமத்திற்கும் நலத்திட்டங்கள் செய்யவில்லை என்றும்  குற்றம் சாட்டியுள்ளார் ..