10-ஆம் வகுப்பு மாணவியின் ஆபாச புகைப்படம்…. தனியார் பள்ளி ஊழியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்வின்(21) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதே புள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் எட்வின் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பள்ளியின் முதல்வர் எட்வினின் செல்போனை வாங்கி சோதனை செய்தபோது மாணவியின் ஆபாச புகைப்படங்களை செல்போனில் எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் எட்வினை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply