காயத்தால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகிய பிருத்வி ஷா..!!

தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா காயம் காரணமாக இந்தியா ஏ அணியில் இருந்து விலகியுள்ளார் 

மனிஷ் பாண்டே தலைமையிலான இந்தியா ஏ அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டியை விளையாட உள்ளது. இத்தொடர் வருகின்ற 11-ம் தேதி தொடங்க இருக்கின்றது. இந்த தொடருக்காக பிருத்விஷா, ரிஷப் பண்ட், மயங் அகர்வால் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். ஆனால் நடைபெற்று வரும் உலக கோப்பையில் விளையாடி வரும் ஷிகர் தவனுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதில் ரிஷப் பண்ட்டம்,  பின்னர் சில நாட்களில் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக மயங் அகர்வாலும் இந்திய அணியில் இடம் பிடித்தனர்.

Image result for பிருத்வி ஷா

இதையடுத்து அவர்கள் இருவருக்கும் பதிலாக விக்கெட் கீப்பர் இஷான்  கிஷன், அல்மோல்ப்ரீத் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு என்ன காயம் என்பது பற்றி தெரியவில்லை. இவருக்கு பதிலாக மகாராஷ்டிராவை சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிருத்வி ஷா  ஐ.பி.எல்லில் டெல்லி அணிக்காக தொடக்க வீரராக சிறப்பாக விளையாடிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.