திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்…. சிறையில் நடந்த விபரீதம்…. வேலூரில் பரபரப்பு….!!!

உடல்நலக்குறைவால் கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கொசப்பாளையதில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். பின்னர் வேலூர் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே காவல்துறையினர் அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.