தொந்தரவு செய்த வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடூமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு போக்சோ நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் இதைப் பற்றி கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று நாகராஜ் மீது புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாகராஜனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த வழக்கானது போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதியான தனசேகரன் என்பவர் குற்றவாளியான நாகராஜுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10000 ரூபாய் பணம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அதன்பிறகு பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு 7 லட்சம் ரூபாய் பணம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *