பிரதமர் தெரசா மேயை சந்தித்து வாழ்த்து பெற்ற இங்கிலாந்து அணி வீரர்கள்..!!

உலக கோப்பையை வென்றதும் பிரதமர் தெரசா மேயை சந்தித்து இங்கிலாந்து அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற  பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள்  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் முதலில்  பேட் செய்த நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. பின்னர் முதல் முறையாக உலக கோப்பையில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனதால், புதியதாக ஐசிசி விதிப்படி அதிக பவுண்டரிகள் அடித்த அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

Related image

44 ஆண்டுகால கனவு கோப்பையை வென்றதால் இங்கிலாந்து அணியினர் தலை கால் புரியாமல் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஒட்டு மொத்த இங்கிலாந்து அணி வீரர்களும் தலைநகர் லண்டனில் உள்ள பிரதமர் தெரசா மேயை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உலக கோப்பையை கையில் ஏந்தியவாறு தெரசா மேவுடன் இங்கிலாந்து வீரர்கள் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.