“போபால் விஷவாயு கசிவு” யார் நியாயம் வழங்குவது….பிரதமர் மோடி கேள்வி..!!

போபால் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு யார் நியாயம் வழங்குவது என்று பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

Image result for மோடி அதிமுக கூட்டணி

 

இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்ய பிரதமர் நரேந்திர  மோடி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு வந்தடைந்தார், பின்னர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் ,மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த தொகுதியானது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தொகுதி. இவர்களின் மண்ணில் காங்கிரஸ் வேட்பாளர்களால் ஒன்றும் செய்ய இயலாது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தின் போது போபால் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு யார் நியாயம் வழங்குவது.கங்கையை போல் வைகையையும்  தூய்மைப்படுத்த விரும்புகிறேன் என்று பிரதமர் மோடிகூறினார்.