சோஃபா வேண்டாம்…. நாற்காலியே போதும்… பிரதமர் மோடி புகைப்படம் எடுத்த  வீடியோ வைரல்.!!

பிரதமர் நரேந்திர மோடி சோபாவை தவிர்த்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு புகைப்படம் எடுத்த  வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர்  மாநாட்டில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கைப் பிரதமர் நரேந்திர மோடியும், அவருடன் சென்றுள்ள பிரதிநிதிகளும் பார்வையிட்டனர்.

Image result for जी की सरलता का उदाहरण आज पुनः देखने को मिला, उन्होंने रूस में अपने लिए की गई विशेष व्यवस्था को हटवा कर अन्य लोगों के साथ सामान्य कुर्सी पर बैठने की इच्छा जाहिर की।

இதனிடையே  விளாடிவாஸ்டாக்  நகரில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுக்கும்போது சொகுசு சோபாவை  தவிர்த்தார். பிரதமர் மோடி மற்றவருடன் சோபாவை தவிர்த்துமற்றவர்களுடன் நாற்காலியில் அமர்ந்து பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார். பிரதமர் மோடி சோபாவை தவிர்த்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு புகைப்படம் எடுத்த  இந்த வீடியோ பதிவை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.