“இந்திய அணி உலகக்கோப்பையுடன் திரும்ப வேண்டும்” பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திரமோடி இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்று தாயகம் திரும்புவதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 349 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 302 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து  பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும்  வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும்  தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறி இருந்தார்.

Image result for Prime Minister Narendra Modi  Indian cricket team.இந்நிலையில் விராட் கோலி வாழ்த்திய பதிவை சுட்டிக் காட்டி பதிவிட்டுள்ள நரேந்திரமோடி, விராட் கோலிக்கு நன்றி தெரிவித்ததுடன் , தங்களுக்கும் இந்திய அணிக்கும் என்னுடைய வாழ்த்துகள், உலகக்கோப்பையை வென்று தாயகம் திரும்பவேண்டும் என தெரிவித்தார். இதேபோல் அணியின் தலைமைப் பயிற்சியாளர்  ரவி சாஸ்திரியும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூற, அவருக்கும் மோடி நன்றி கூறி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.