“மதிப்புமிக்க யோசனைகள்” நன்றி கூறி பிரதமர் மோடி ட்வீட் …!!

மோடி தலைமையில் நடந்த அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து மோடி ட்வீட் செய்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்து  கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல், அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிந்த பின்னர்  பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், முதல் முறையாகவும், மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவும் நாங்கள் ஒரு பயனுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினோம். மதிப்புமிக்க யோசனைகள் கூறிய தலைவர்களுக்கு நன்றி. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய வகையில், நாங்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவதற்கு ஒப்புக்கொண்டோம்” என கூறி உள்ளார்.