”தடை கற்கள் பெயர்த்தெறியப்பட்டுள்ளது” பிரதமர் மோடி பேச்சு …!!

காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்த  தடைக்கற்கள் பெயர்த்தெறியப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

Image result for modi speech

அப்போது அவர் , 370 சட்டப்பிரிவு ரத்து செய்துள்ளதால் காஷ்மீர் லடாக் பகுதி வளர்ச்சி அடையும். ஊழலும் பயங்கரவாதம் வளரவே 370 சட்ட பிரிவு உதவியது  பயங்கரவாதத்தின் எரிபொருளாக இருந்த 370 சட்டபிரிவு நீக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் 42,000 பேர் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரில் குடும்ப ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Image result for modi speech

ஜம்மு காஷ்மீர் லடாக் யூனியன் பிரதேசங்கள் காண எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. நீதி நிலை நாட்டப்பட்டு, மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்த தடைக்கற்கள் பெயர்த்தெறியப்பட்டுள்ளது.இதனால் ஒன்றரை கோடியை காஷ்மீரிகள் அதிக பலன் பெறப் போகிறார்கள்.மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் நாடுகளும் சென்றடைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்தார்.