பத்தாண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கு கிடைக்காத சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கப்படும் என்று மோடி தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி ,இனி காஷ்மீர் குழந்தைகளுக்கு கல்வி , மருத்துவ வசதி , ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் தடையின்றி கிடைக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் , காஷ்மீர் மக்களுக்கு இனி வேலை வாய்ப்பு எளிதில் கிடைக்கும். எரிவாயு மானியம் , கல்வி கடன் , வீட்டுக் கடன் உள்ளிட்ட திட்டங்களை காஷ்மீரிகள் அனுபவிக்கலாம். காஷ்மீர் இளைஞர்கள் கல்வி வேலைவாய்ப்பினை தங்கு தடையின்றிக் கிடைக்கும். பிரதமரின் கல்வி உதவித்தொகை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும். காஷ்மீர் மக்களின் முன்னேற்ற பாதையில் பயணிப்பார்கள் காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை யாராலும் தடுக்க முடியாது.
மேலும் , காவல்துறை மற்றும் அரசு ஊழியருக்கான அனைத்து பலன்களையும் இனி தடையின்றி வழங்கப்படும். மத்திய அரசின் நேரடிப் பார்வையில் காஷ்மீர் மற்றும் லடாக் நிர்வாகம் ஊழல் இன்றி சிறந்து விளங்கும்.சட்டப்பிரிவு 370 செய்யப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளது. காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்றது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் புதிய விடியல் கிடைத்துள்ளது. பல பத்தாண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கு கிடைக்காத சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கப்படும் என்று மோடி தெரிவித்தார்.