பிரதமர் மோடி தீவிரமாக முயற்சி செஞ்சுட்டு இருக்காரு… நச்சுன்னு ஐஸ் வச்சு பேசிய ஓபிஎஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு என்னுடைய அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நடைபெற இருக்கின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான  இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலைப்படை ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன்.

இந்த தேர்தலில் உறுதியாக தேர்தல் களத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் போட்டியிடும் என்றும்,  இன்றைக்கு இந்தியாவை வல்லரசாக ஆக்கி காட்டுகின்ற தீவிர முயற்சியில் நமது மாண்புமிகு பாரத பிரதமர் பத்தாண்டு காலம் ஒரு சிறப்பான ஆட்சியை நிறைவு செய்து இருக்கின்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் போட்டியிட வந்தால்,

விருப்பம் தெரிவித்தால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆதரவளிக்கும் என்ற எங்களுடைய நிலைப்பாட்டை நான் தெரிவித்திருந்தேன். அந்த நிலைப்பாட்டோடு புதிய நீதி கட்சியின் நிறுவன தலைவர் மரியாதைக்குரிய அருமை அண்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து,  இருக்கின்ற அரசியல் சூழ்நிலை குறித்து பேசுவதற்காக நாங்கள் வருகை தந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply