2022-ல் “விவசாயிகளின் வருமானம்” இரட்டிப்பாகும் – பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி நிதி ஆயோக் கூட்டத்தில், 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். இதில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் உடல்நிலை காரணமாக பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிதி ஆயோக் கூட்டதில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் விவசாயிகளை சென்றுசேர வேண்டும் ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி உள்ளிட்டவற்றை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது. மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். 2025க்குள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது –