பா.க் பிரதமர் இம்ரானுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம்…!!

பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினத்தையடுத்து  பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையடுத்து இந்திய பிரதமர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். மோடி அனுப்பியுள்ள  கடிதத்தில் பாகிஸ்தானின் தேசிய தினத்தை முன்னிட்டு மக்களுக்கு என் வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கின்றேன். பயங்கரவாதமும் ,  வன்முறையும்  இல்லாத நிலையில், நாட்டின் ஜனநாயகம், அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றிற்காக தெற்காசிய மக்கள் இணைந்து செயல்பட வேண்டிய  தருணம் இது என்று மோடி தெரிவித்துள்ள வாழ்த்து கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .  மேலும், மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை வரவேற்பதாகவும், இரு நாடுகளும் காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சனைகளையும்  தீர்வு காண  பரந்த ஆலோசனை நடத்துவதற்கான நேரம் வந்து விட்டது என்றும்  இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார். சமீபத்தில் புல்வாமா தாக்குதலால் இரு நாடுகளின் உறவில் ஒரு மோசமான நிலை ஏற்பட்ட சூழலில் பிரதமர் மோடியின் இந்த வாழ்த்து செய்தி குறிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.