ஆன்பன் புயலால் பாதித்த மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி உடனடி நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

ஆன்பன் புயலால் பாதித்த மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி உடனடி நிவாரணம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

வங்கி கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் கடந்த 20ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கியது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்கம் முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது. மேலும் ஒடிசாவில் கனமழையால் கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஆம்பன் புயலால் மேற்குவங்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ஆம்பன் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி மேற்கு வங்கம் சென்றார். கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார். இதனை தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அவரும் அம்மாநில முதல்வர் மம்தாவும் இருந்தார்.

இந்த புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்த பின்னர் ஆன்பன் புயலால் பாதித்த மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி உடனடி நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் மத்திய, மாநில அரசுகள் துணை நிற்கும், இக்கட்டான இந்த தருணத்தில் மேற்கு வங்க மக்களுக்கு நாடே துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புயலால் உயிரிழந்த மக்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். முன்னதாக  உரியிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *