இந்தியா ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் காஷ்மீர் பகுதி அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் இருப்பதும், அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் இணைய சேவை துண்டிப்பு தற்போது வரை இருப்பதை கேள்விப்பட்டு நாங்கள் கவலை அடைகின்றோம்.மனித உரிமைகளை மதித்து , அங்கு துண்டிக்கப்பட்ட இணையம் மற்றும் மொபைல் சேவைகளை முழுமையாக வழங்க இந்திய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய அரசு ஜம்மு_வுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அங்கு தேர்தல்களை விரைவாக நடத்தும் என்று எதிர்நோக்குகிறோம் என்று தெரிவித்தார்.கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் நடந்த ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி , அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசிய போது , ஜம்மு விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் பேசி தீர்த்துக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ்ஸின் இந்த கருத்து முரணாக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.