வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றிய ட்ரம்ப்…. இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து.!!

தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும்விதமாக வெள்ளை மாளிகையில் தீபத்தை ஏற்றிவைத்த அதிபர் ட்ரம்ப், தீபாவளி திருநாளை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக் கூறியுள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது நமது நாட்டின் மிக முக்கியக் கொள்கையான மத சுதந்திரத்தை பேணும்வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Image result for President Diwali greets Indians living in the United States during Diwali.

இந்திய மக்கள் தீபாவளி கொண்டாடும் காலம் மிகவும் புனிதமான காலம் என்று குறிப்பிட்ட ட்ரம்ப், இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், பௌத்தர்கள் அமெரிக்காவிலும் உலகின் பல நாடுகளிலும் வசிக்கிறார்கள்; அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இருளை ஒளி வெல்ல வேண்டும்: தீமையை நன்மை வெல்ல வேண்டும்: அறியாமையை ஞானம் வெல்ல வேண்டும் என்றும் வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியுள்ளார்.

Image result for Donald Trump celebrated Diwali with a small group of Indian- ... Sending Diwali greetings

இந்தப் புனித காலத்தில் மக்கள் வீடுகளில் தீபத்தை ஏற்றிவைத்து உறவினர்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்று கூறிய ட்ரம்ப், அனைத்துத் தரப்பு மக்களின் சமய நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.பாரக் ஒபாமா அதிபரான காலத்திலிருந்து வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *