உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மகா கும்பமேளாவில் 4-வது முறையாக மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதாவது செக்டார் 18 பகுதியில் VVIP-க்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் முழுவதும் தீப்பிடித்து எரிந்தன. இதனால் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பக்தர்கள் யாரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.