ஜினான் ATP ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தகுதி பெற்றுள்ளார்.
முன்னணி வீரர் பிரஜ்னேஷ் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் சீன வீரர் தைபேவின் உ டுங் லின்-ஐ 6-4, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். பிரஜ்னேஷ் காலிறுதி சுற்றில் ஜப்பான் வீரர் கோ சோடேவை எதிர்கொள்ளவிருக்கிறார்.

மேலும் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான தி விஜ் சரண்-மேத்யூ எப்டன் இணை 6-1, 6-4 என்ற கணக்கில் பெட்ஜா-அகிரா இணையை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.