கனடா நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் லிபரல் கட்சி ஆகிய இரண்டும் பிரதான கட்சிகளாக இருக்கின்றன. இதில் லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூட்டோ தலைமையிலான ஆட்சி கனடாவில் நடந்து வருகின்றது. இங்கு கடந்த இரண்டு முறை நடந்த பொதுத் தேர்தலிலும் சீனாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் லிபரல் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் தனக்கு ஆதரவாக இருக்கும் என சீனா விரும்புவதாகவும் அதற்காக சீனா பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் உளவுத்துறை மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த சம்பவத்தினால் கனடாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது குறித்து விரிவான விசாரணை நடத்த முன்னாள் கவர்னர் டேவிட் ஜான்ஸ்டன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ தெரிவித்துள்ளார்.