தங்க நாணயம் திட்டம்…. பொதுமக்கள் ஏமாற்றம்…. போலீஸ் நடவடிக்கை….!!

தங்க நாணயம் திட்டம் மூலமாக பல நபர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள  சடாய் பகுதியில் சுரேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகின்றார். இந்நிலையில் தங்க நாணயம் என்ற திட்டம் ஒன்றை நடத்தி இதனில் 1,00,000 ரூபாய் முதலீடு செய்தால், 30 வேலை நாட்களில் தலா ஒரு கிராம் வீதம் 30 தங்க நாணயங்கள் வழங்கப்படும். இவற்றில் முதலீடு செய்த அசல் பணம் நமக்கு திரும்ப கிடைத்துவிடும். அதன்பின் 5 மாதங்களில் 8 தங்க நாணயங்கள் வீதம் 40 தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படும். இந்த திட்டம் மொத்தமாக ஏழு மாதங்களில் முடிந்துவிடும்.

இதில் 1,00,000 ரூபாய் முதலிட்டிற்காக 40 நாணயங்கள் வழங்கப்படும். ஆதலால் இதை நம்பி தாஜ்புரா கிராமத்தில் வசிக்கும் திருநாவுக்கரசு இத்திட்டத்தில் 7,00,000 ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். இதைப்போல் அவருடைய நண்பர் செல்வமும் 20,00,000 ரூபாயை முதலீடு செய்திருக்கிறார். இவற்றில் இவர்களைப் போல் பலரும் முதலீடு செய்திருக்கின்றனர். இதனை அடுத்து சில நாட்கள் மட்டும் தங்க நாணயம் வழங்கியதும், பின் அவர் ஒரு மாதம் முடிந்த பிறகு இத்திட்டத்தை திடீரென நிறுத்தியுள்ளார்.

இது பற்றி திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர் செல்வம் என பலர் சுரேஷ்பாபுவிடம் கேட்டதில் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என கூறியுள்ளார். ஆனால் சுரேஷ்பாபு பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகின்றது. இதன் காரணத்தினால் பாதிக்கப்பட்ட திருநாவுக்கரசு, செல்வம் மற்றும் பலர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷ்பாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த தங்க நாணய திட்டத்தின் மூலமாக பல நபர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *