பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்…. சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகள் கொட்டிய நபர்களிடமிருந்து ரூ.6.43 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கூறியது, சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் நாள்தோறும் சரியாக 5200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேர்க்கப்படுகின்றன. தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கு தினந்தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன.

மேலும் பொது இடங்களில் குப்பை தொட்டிகள் கொட்டப்படும் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு அதில் மக்கும் குப்பைகளை மாநகராட்சி யின் மறுசுழற்சி மையங்களில் இயற்கை உரமாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. மக்காத குப்பைகளை பிரித்து எடுக்கப்பட்டு மறுசுழற்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது. இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குப்பை இல்லா நகரமாக மற்றும் தூய்மையாக பராமரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாநகராட்சியின் சில பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது மற்றும் கட்டிட கழிவுகளை பொது இடங்களிலும் மற்றும் சாலை ஓரங்களிலும் கொட்டப்படுவதால் மாநகராட்சிக்கு புகார்கள் வந்துள்ளது. இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

இதனால் சென்னை மாநகராட்சி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை கொட்டுபவர், வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்கள், கட்டுமானங்களை பொது இடங்களில் மற்றும் சாலைகளில் கொட்டுபவர் மற்றும் நீர்நிலைகள் குப்பைகளை ஏறிபவர் ஆகியோர்கள் மீது மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 இப்படி அபராதம் விதிக்கப்படும். அதன்படி கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 503 நபர்களிடம் 3,19,200 அபராதம் மற்றும் பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டி 123 நபர்கள் மீதுரூ. 3,24,300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பொது இடங்கள் மற்றும் நீர் வழித்தடங்கள் குப்பைகளை கொட்டுவது தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *