போதைப்பொருள் விவகாரம் சிறைக்குள் மோதிக்கொள்ளும் நடிகைகள்…!!

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோர் சிறைக்குள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் கன்னட திரையுலகில் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப் பொருட்கள் பயன் படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோர் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. ராஜினி இரவு வரை புத்தகம் படிப்பதாகவும், இதனால் தன்னால் தூங்க முடியவில்லை எனவும் சஞ்சனா தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகை சஞ்சனா அதிகாலையில் எழுந்து அறையில் மின் விளக்கை எரிய விட்டபடி யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்வதாகவும் ராகினி குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் இருவரையும் சிறை அதிகாரிகள் சமாதானம் படுத்தினாலும் சண்டை ஓயவில்லை. சில நேரங்களில் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாகவும் அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *