பார்த்தவுடன் சுவைக்க தூண்டும் உருளைக்கிழங்கு, குடைமிளகாய் கிரேவி…!!!

செய்ய தேவையான பொருட்கள் :

குடைமிளகாய் – 3

உருளைக்கிழங்கு – 2

தக்காளி -2

இஞ்சி – சிறிதளவு

பூண்டு – 10 பல்

சீரகம் – அரை டீஸ்பூன்

பட்டை – சிறிதளவு

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையானா அளவு

செய்முறை :

முதலில் தக்காளி,குடைமிளகாயை  நன்கு சுத்தம் செய்து  துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பின்பு உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.

பின்பு தக்காளி, சீரகம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக

அரைத்துக்கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்து வைத்த விழுதை சேர்த்துநன்றாக  கிளறிவிடவும்.

அடுத்தாக குடைமிளகாய், வேகவைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

கிரேவி பதத்துக்கு வந்ததும் இறக்கி பரிமாறலாம்.

உருளைக்கிழங்கு – குடைமிளகாய் கிரேவி தயார்.

உருளைக்கிழங்கு - குடைமிளகாய் கிரேவி க்கான பட முடிவு