கடந்த 14-ம் தேதி ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசு கடந்த 13-ம் தேதி இந்தியா முழுவதும் இனி வரும் தபால் துறை தேர்வுகளுக்கான கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தான் இருக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் 14-ஆம் தேதி நாடு முழுவதும் தபால் துறையில் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு நடைபெற்றது. இதில் மத்திய அரசின் அறிவிப்பின் படியே மாறாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் கேள்வித்தாள்கள் இருந்தது.

இதற்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் சர்ச்சை கிளம்பியது. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு பின் வாங்கி தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் பதில் அளித்த மத்திய அரசு இனி அந்தந்த மாநில மொழிகளில் தபால் துறை தேர்தல் நடக்கும் என்று உறுதியளித்தது.
இந்நிலையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதிநடைபெறும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்திலும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் தபால்தேர்வு நடைபெறும் என்று தபால்துறை அறிவித்துள்ளது