ஒருநாள் விடுப்பு போராட்டம்…. ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை….!!!!

ஒருநாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இருப்பதாவது,

“சட்டசபையில் மானியக் கோரிக்கை எடுத்துக்கொள்ளப்படும் 30-ஆம் தேதி அன்று போராட்டத்தில் பங்கேற்கும் (அல்லது) வேலைக்கு வராமல் இருக்கும் பணியாளர்களுக்கு அரசு பணி நன்னடத்தை விதியின்படி ஊதியம் பிடித்தம் செய்யப்படும்” என குறிப்பிட்டுள்ளது