பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளரான எஸ்.முத்தையா திடீர் மரணம்….!!

சென்னை மாநகரத்தின் அரசியல், கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்கள்  எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா இன்று காலமானார்.

சென்னையில் பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89. சிவகங்கை மாவட்டத்தில், பள்ளத்தூர் என்ற நகரில் 1930ஆம் ஆண்டு முத்தையாபிறந்தார். இவர், கட்டிடப்பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் படித்துள்ளார். இவர் 1951-ம் ஆண்டு டைம்ஸ் ஆப் சிலோன் பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து ஞாயிறு இதழின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

Image result for எஸ்.முத்தையா

சென்னையின் மறுகண்டுபிடிப்பு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய இவர் சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றை பற்றியும்  பல புத்தகங்களை எழுதியுள்ளார். தற்போது சென்னையில் வசித்துவந்த அவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.