“பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்த கசிவு”…. மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

பிரபலமான கர்நாடகா இசை பாடகி பாம்பே ஜெயஸ்ரீ (59). இவர் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மேடை கச்சேரிகளிலும் பல பாடல்களை பாடிவரும் பாம்பே ஜெயஸ்ரீ பல்வேறு இசை கச்சேரிகளிலும் கலந்து கொள்கிறார். அந்த வகையில் லண்டனில் நடைபெற்ற ஒரு இசைக் கச்சேரியில் கலந்து கொள்வதற்காக பாம்பே ஜெயஸ்ரீ அங்கு சென்றுள்ளார்.

அப்போது அவருடைய அறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக தற்போது மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் அவருடைய உடல் நலம் சீராக இருப்பதாக கூறப்படுகிறது.