தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாகும் பிரபல பாலிவுட் நடிகை…. யாருக்கு ஜோடி தெரியுமா…?

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் சோனாக்ஷி தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான ‘சோக்காடே சின்னி நாயனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட்டானது. இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.நடிகை சோனாக்ஷி இப்படத்தில் நடிப்பதன் மூலம் அவர் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாகும் முதல் படம் இதுவே ஆகும் என்று கூறப்படுகிறது. மேலும் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் சோனாக்ஷி தமிழில் லிங்கா படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *