“மாடுகளுக்கு நன்றி செலுத்தும் தினம்” சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா….!!!

மாட்டுப் பொங்கல் சிறப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில் பொங்கல் திருநாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கால்நடைகளை குளிப்பாட்டி, பொட்டு, மலர்கள் மற்றும் சலங்கை உள்ளிட்டவற்றை அணிவித்து மாடுகளை அலங்கரித்தனர்.

இதனையடுத்து மாட்டுக்கொட்டகை அருகில் பந்தல் போட்டு, கரும்புகள் கட்டி புதிய மண்பானையில் பொங்கல் வைத்து விவசாயிகள் தங்களது நன்றியை மாடுகளுக்கு தெரிவித்து உற்சாகமாக மாட்டுப் பொங்கலை கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *