பொள்ளாச்சியில் இளம்பெண்களை சீரழித்தவர்களை ஆளுங்கட்சி காப்பாற்ற நினைப்பது கண்டனத்துக்குரியது வெட்கக்கேடானது மு க ஸ்டாலின்

தமிழ் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கும் விதமாக பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவமானது தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையையும் நிரூபிக்கும் விதமாக உள்ளது

தமிழகத்திலேயே கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த பிரச்சனைக்கு தமிழக அரசானது சரியான தீர்வினை தற்போது வரை கையாளவில்லை என்றும் குற்றவாளிகள் மீது சரியான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவில்லை என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் இந்த பிரச்சனையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கும் ஆளுங்கட்சியில் இருக்கக்கூடியவர்களுக்கும் தொடர்பு  உள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .

 இந்த பிரச்சனைக்கு தமிழக அரசும் ஆளும் கட்சியும் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் எதிர்க்கட்சிகளும் பல்வேறு அரசியல் இயக்கங்களும் பொதுநல இயக்கங்களும் தொடர்ந்து போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றனர் இதனை தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம் மாதர் சங்கம் மற்றும் திமுக தரப்பில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்று வந்தன இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் திருமாவளவன் கொங்கு தேசிய மக்கள் கட்சி தலைவர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர் மேலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்

தமிழ்நாடே குலை நடுங்கும் வகையில் இளம்பெண்களை சீரழித்த இந்தப் பிரச்னையில், குற்றவாளிகளை காப்பாற்றுவதில் ஆளுங்கட்சியே போராடுவது கடும் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல வெட்கக்கேடானது.நிச்சயம், திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட ரீதியிலும், மக்கள் மன்றத்திலும் போராட்டத்தை மேற்கொள்ளும் என்று அவர் பதிவிட்டுள்ளார்