“போலியாக சான்று கொடுக்காங்க”…. குற்றம்சாட்டிய விவசாயிகள்…. திருவாரூரில் பரபரப்பு….!!

நிவாரண தொகை கொடுப்பதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் 1 லட்சத்து 36 ஆயிரம் பரப்பில் இந்த வருடத்திற்கான குறுவைசாகுபடி செய்ததில் விவசாயிகள் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் பருவமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குழுவினர் கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து மழையினால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு ஒரு ஏக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அதன்பின் இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணி நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு கிராமத்தில் இந்த வருடம் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். இதில் கனமழையால் நஷ்டத்தை சந்திக்காத விவசாயிகளுக்கு பயிர்கள் பாதிப்படைந்ததாக சொல்லி போலியாக சான்று கொடுத்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதற்காக பின்னவாசல் கடைவீதியில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் அன்பழகன், வேளாண்மை துறை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிலா நிர்மலா மற்றும் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது போலியாக கொடுக்கப்பட்ட சான்றிதழ்கள் உடனே ரத்து செய்யப்படும் என்றும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்த பின் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *