சில்லித்தனமான அரசியல் …. உள்ளாட்சியில் போட்டியில்லை – பின்வாங்கிய ரஜினி

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது , அவரிடம் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு , பொன்ராதாகிருஷ்ணன சந்திப்பு போன்ற ஏராளமான விஷயங்களுக்கு பதிலளித்து பேசினார். அப்போது திருவள்ளுவர் சிலை வைத்து அரசியல் செய்யப்படுகிறது குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினி, திருவள்ளுவர் ஒரு மிகப் பெரிய ஞானி. அவர் ஒரு சித்தர். ஞானிகளையும், சித்தர்களையும் எந்த ஒரு மதம் , ஜாதி  என்ற எந்த ஒரு எல்லைக்குள் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. அதற்கு வந்து அப்பாற்பட்டவர்கள்.

Image result for திருவள்ளுவர் சிலை

திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை உடையவர். அவர் எழுதிய திருக்குறளை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். கடவுள் நம்பிக்கை உள்ளவர் , நாத்திகர் அல்ல , அவர் ஆத்திகர்.அதை யாரும் மறுக்க முடியாது. பிஜேபி அவர்களுடைய ஆபீஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ள்ளது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். தெருவுல இருக்குற சிலைகள் எல்லாம் பட்டைய போடணும்னு என்று அவர்கள் சொல்லவில்லை என்று ரஜினி தெரிவித்தார்.

Image result for rajinikanth

மேலும் இது ஒரு பெரிய பிரச்சனையாக மாற்றி , சர்ச்சையாகி இவ்வளவு பெரிய விஷயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த ரஜினி , இந்த நாட்டிலே மக்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் , தேவைகள் எத்தனையோ இருக்கு அதெல்லாம் பேச வேண்டியத விட்டுட்டு விட்டுட்டு இத பத்தி பேசுறது ரொம்ப சில்லியாக இருக்கு என்று பதிலளித்தார்.

Image result for rajinikanth VS BJP

 

எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்தாதவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.ரொம்ப சந்தோசமா இருக்கு , வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை என்று தெரிவித்த ரஜினி, தன்னை பொன்ராதாகிருஷ்ணன் சந்திப்பில் எதுவுமே இல்லை. எனக்கு பிஜேபி கலர் பூசுவதற்கான முயற்சி நடக்குது. திருவள்ளுவருக்கு காபி பூசின மாதிரி எனக்கும் பூச பாக்குறாங்க திருவள்ளுவரும் சிக்க மாட்டார் , நானும் சிக்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *