பள்ளி மாணவர்களுக்கு தலா 50 ரூபாய் !!..அணல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்!!..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை பணம் கொடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த  ஊத்தங்கரை என்னும் பகுதியில் பள்ளி சிறுவர்களுக்கு தலைக்கு 50 ரூபாய் கொடுத்து   தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதனையடுத்து  ஊத்தங்கரைக்கு அருகில்  சிங்காரபேட்டை பள்ளி மாணவர்கள், அரசியல் கட்சியின் கொடியைப் பிடித்துக் கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு ஆதாரங்களுடன் பிடிபட்டனர் இதில் சில மாணவர்கள், பள்ளிச் சீருடையில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று இருந்தனர்.

ஒவ்வொரு மாணவனுக்கும்   50 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டு  பிரச்சாரத்திற்கு வர வைத்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்