போலீசாருக்கு கிடைத்த தகவல் …. லஞ்ச ஒழிப்புதுறை திடீர் சோதனை…. ரூ 21 ஆயிரம் பறிமுதல் ….!!!

நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறைபோலீசார் திடீர் சோதனை நடத்திய போது  கணக்கில் வராத ரூபாய் 21 ஆயிரம் பணத்தை  பறிமுதல் செய்தனர்.

நாகையில் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவான கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில் நாகை தாலுகாவிற்கு உட்பட்ட 139 ரேஷன் கடைகளில் பணியாற்றிவரும் பணியாளர்களிடம் இருந்து வட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் லஞ்சம்  லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சித்ரவேலு தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார் , அருண் பிரியா மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று முன்தினம்  வட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வட்ட வழங்கல் அலுவலரான பூபதி இடமிருந்து கணக்கில் வராத ரூபாய் 21 ஆயிரத்து  50-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அலுவலக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *