குற்றங்களை ஏன் தடுக்கவில்லை….? பணி செய்ய தவறிய போலீஸ்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!!

குற்ற சம்பவங்களை தடுக்க தவறிய போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவோணம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் ஈடுபட்டவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரத்தநாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதோடு கைது செய்யப்பட்டவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் திருவோணம் பகுதியில் நடந்த குற்ற சம்பவங்களை தடுக்க தவறிய காரணத்திற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகனை பணியிடை நீக்கம் செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *