இவருதான் உண்மையான “HERO” மின்னல் வேகத்தில் காப்பாற்றப்பட்ட முதியவர்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ரயிலில் ஏற முயன்ற போது கீழே விழுந்த முதியவரின் உயிரை விரைந்து சென்று காப்பாற்றிய போலீஸ்காரரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மதபூர் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு ரயிலில் முதியவர் ஒருவர் ஏற முயற்சிக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் விரைந்து சென்று அந்த முதியவரை மீட்டுள்ளார. இவ்வாறு அவர் கீழே விழுந்த சற்று நேரத்திலேயே போலீஸ்காரர் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே முதியவர் சிக்காமல் அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.

இந்நிலையில் போலீஸ்காரர் சிறப்பாக செயல்பட்டு முதியவரின் உயிரை காப்பாற்றிய வீடியோவை மத்திய ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மதபூர் ரயில்வே நிலையத்தில் கீழே விழுந்த முதியவரின் உயிரை விரைவாக செயல்பட்டு போலீஸ்காரர் காப்பாற்றியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் தனது பணியை முழுமையாக செய்து ஒரு உயிரை காப்பாற்றிய போலீஸ்காரரை நினைத்து தாங்கள் பெருமைப்படுவதாக கூறியுள்ளார். அதோடு வீடியோவை பார்த்த பலர் போலீஸ்காரரை “ஹீரோ” என பதிவிட்டு தங்கள் பாராட்டுகளை தெரிவிக்கின்றனர்.