நாமக்கல் மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடியும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழிகாட்டுதலின் படியும், நாகை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக நாகை எல்லை குட்பட்ட ஒரு தனியார் கல்லூரி முன்பாக நேற்று முன்தினம் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான வாகன சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இல்லாமலும், செல்போனில் பேசிக்கொண்டு சென்றவர்கள் மற்றும் வாகனத்தில் ஆவணங்கள் இல்லாமல் சென்றவர்கள் உட்பட 25 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.