ஆன்லைன் மூலம் படித்த கல்லூரி மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஜெகவீரம்பட்டி பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அக்ஷயா(21) தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரிக்கு நேரில் சென்று படிக்காமல் ஆன்லைன் மூலமாக அக்ஷயா படங்களை படித்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்த தேர்வில் அக்ஷயா தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அக்ஷயா தனது பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அக்ஷயாவை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அக்ஷயா நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அக்ஷயா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.