குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டு கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த முரளி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் முரளியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.