பிளஸ்-1 மாணவி தற்கொலை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எல்லப்புடையான் பட்டி கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மகள் தமிழினியாள் (16) அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் வீட்டில் இருந்த தமிழினியாள் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழினியாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.