விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி…. கண் பார்வை மங்கியதால் நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓட்டுக்கொட்டாய் கிராமத்தில் திருப்பதி- சந்தியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதுடைய கோமதி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமிக்கு மாலைக்கண் நோய் பாதிப்பு இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வீட்டிற்கு அருகே கோமதி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது சமையல் செய்வதற்காக சந்தியா வீட்டிற்கு முன்பு இருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று தொட்டியை மூடாமல் சென்றுவிட்டார். அதே நேரம் கண் பார்வை மங்கியதால் எதிர்பாராதவிதமாக கோமதி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாள்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கோமதி தனது மகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்து டாக்டர்கள் கோமதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply