ரூ.5 கோடி சொத்து மோசடி…. அமெரிக்க டாக்டர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவிகா என்பவர் அமெரிக்காவில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் பல ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்கா வந்துவிட்டேன். எனது தந்தை உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் எனது தந்தைக்கு சொந்தமான 5 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்து ஓமலூர் சாலையில் இருக்கிறது.

அந்த நிலத்தை 3 பேர் கொண்ட கும்பல் போலி ஆவணம் மூலம் மோசடி செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply